இந்தியா – ஆஸி., உறவால் உலகிற்கு நன்மை: பிரதமர் மோடி

பிரதமர் மோடி பேசியதாவது: ஆஸி.,யில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு, இந்திய மக்கள் சார்பில் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்த இதுவே சரியான நேரம். நமதுநட்பை பலப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை, வாய்ப்பாக மாற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நமது உறவை பொறுத்து தான், இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவும். கொரோனா பிரச்னையை ஒரு வாய்ப்பாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதன் பலன்கள் விரைவில் தெரிய வரும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் இருந்து விடுபட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆஸி.,யுடன் உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், இந்தோ – பசுபிக் – பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் இதனால், பலன் கிடைக்கும் . இவ்வாறு பிரதமர் பேசினார்.

இதன் பின்னர் ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசுகையில், இந்தியாவிற்கு மட்டுமல்லமல், ஜி20 இந்தோ பசுபிக் பிராந்தியத்திற்கு தலைமை வகிப்பதற்கும், இந்த மோசமான சூழ்நிலையில், ஸ்திரத்தன்மை நிலவவும், ஆக்கப்பூர்வமான, நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்த பிரதமர் மோடிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தோ – பசுபிக் பகுதியில் இந்தியாவின் பங்களிப்பிற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

இந்த பகுதி வருங்காலங்களில் முக்கிய பங்காற்றும. இது போன்ற சூழ்நிலையில் நாம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் சந்திப்பது எனக்க ஆச்சர்யம் அளிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னரே, உங்களது பிரசாரத்தில் ஹோலோகிராம் முறையை பயன்படுத்தியுள்ளீர்கள். அடுத்த முறை, இங்கும் அதனை நாம் பயன்படுத்தலாம் இவ்வாறு ஆஸி., பிரதமர் பேசினார்.

Related posts

Leave a Comment