கண்காணியுங்க ! கண்மாய்களில் கொட்டப்படும் கழிவுகள: நிலத்தடி நீர் மாசால் விவசாயிகள் அவதி

ராஜபாளையம்: விவாயத்திறகு அடிப்படையான கண்மாய்களில் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு தொடர்கிறது. துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து தடுக்க வேண்டும்.

மனிதனுக்கு தேவையான நீரை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை அமைத்து பாதுகாத்து வந்தோம்.ஆனால் இதை முறையாக கண்காணிக்க தவறியதால்இதை நம்பி வாழ்ந்து வரும் பறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட கண்ணிற்கு தெரியாத உயிர் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விட்டோம்.

மக்கள் பெருக்கம், ஆக்கிரமிப்பு ,முறையற்ற கழிவு மேலாண்மையால் இந்நிலை தொடர்கிறது. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பையை கண்மாய் கரையில் கொட்டி நிலத்தடிநீருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதோடு குப்பையை எரிப்பதால் ஏற்படும் புகையானது சுற்று மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீடுகளில் வெளியேறும் கழிவுநீரும் கண்மாய்களில் கலக்கிறது.

கழிவு நீரும் குப்பையும் ஒன்று சேர நிலத்தடி நீர் பாழாக கண்மாய் நீரை நம்பி உள்ள விவசாய கிணற்று தண்ணீரும் மாசடைகிறது.

நடவடிக்கை எடுங்க

கண்மாயில் குப்பையை அதிகமாக கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நிலத்தடி நீரும் பாதிக்கிறது. தாலுகா அலுவலகம் அருகே உள்ள புளியங்குளம் கண்மாய் முன்பு ஒரு பகுதியை சிலர் மண் மேவி ஆக்கிரமித்திருந்தனர். தற்போது கெமிக்கல் குப்பையோடு கழிவுகளை கொட்டுகின்றனர். அனைத்து பகுதியினரும் கடந்து செல்லும் இது போன்ற இடத்திலே நடைபெறும் விதி மீறல்களை அதிகாரிகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

.ராஜகோபால், விவசாயி,ராஜபாளையம்

Related posts

Leave a Comment