கூட்டத்தால் ஆதார் மையம் மூடல் தகவல் இல்லாததால் மக்கள் அவதி

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் நகராட்சி அலுவலகம், தபால் நிலையம், தாலுகா அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வந்தது.

கொரோனா அச்சத்தால் தாலுகா அலுவலகம் தவிர மற்ற இரு இடங்களிலும் ஆதார் மையம் மூடப்பட்டது.தாலுகா அலுவலகத்தில் மட்டும் செயல்பட்டதால் இங்கு அதிகளவில் மக்கள் கூடினர். இதனால் இதுவும் முறையான அறிவிப்பு இன்றி மூடப்பட்டது . இது தெரியாலம் அதிகாலை முதலே மக்கள் இடம் பிடித்து காத்திருக்கின்றனர்.

முத்துலிங்காபுரம் சுஜாதா : அதிகாலை 5 :00மணி முதல் இடம் பிடித்து காத்திருக்கிறோம். சேவை மையம் திறப்பு பற்றி இது வரை தவகல் இல்லை. பஸ் வசதியின்றி ஆட்டோவில் வந்தும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது ,என்றார்.

Related posts

Leave a Comment