ராம்கோ சேர்மன் பிறந்த நாள் விழா

ராஜபாளையம்:ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா 85 வது பிறந்த நாள் விழா ராஜபாளையத்தில் நடந்தது.

பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் மைதானம் நினைவாலயத்தில் நடந்த கீர்த்தனாஞ்சலியில் ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா குடும்பத்தினர்,நிறுவன அதிகாரிகள்,கல்வி, தொழில் நிறுவன உறுப்பினர்கள், பொது மக்கள் மரியாதை செலுத்தினர். தெற்கு வெங்காநல்லுார் வேதபாடசாலையில் இருந்து திருஉருவப்படத்துடன் கூடிய அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்ட நினைவு ஜோதி சாரதாம்பாள் கோயில், ராமமந்திரம் வழியாக மில்ஸ் வளாகத்தை அடைந்தது. வழியில் பல்வேறு இடங்களில் மரியாதை செய்யப்பட்டது.

Related posts

Leave a Comment