விலங்குகளிடம் அன்பாக இருங்கள்: சச்சின், கோஹ்லி வேண்டுகோள்

மும்பை : ”நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளிடம் அன்பாக இருங்கள்,” என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

கேரளாவில் பட்டாசு மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசிபழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை, பலத்த காயமடைந்து மரணம் அடைந்தது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’கேரளாவில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். தயவு செய்து நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,’ என தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் கூறுகையில்,”அடையாளம் தெரியாத நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க கேரளா வனத்துறைக்கு நமது ஆதரவையும், உதவியையும் வழங்குவோம்,” என்றார்.

Related posts

Leave a Comment