இந்தியா – ஆஸி., உறவால் உலகிற்கு நன்மை: பிரதமர் மோடி

பிரதமர் மோடி பேசியதாவது: ஆஸி.,யில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு, இந்திய மக்கள் சார்பில் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்த இதுவே சரியான நேரம். நமதுநட்பை பலப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை, வாய்ப்பாக மாற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நமது உறவை பொறுத்து தான், இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவும். கொரோனா பிரச்னையை ஒரு வாய்ப்பாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் பலன்கள் விரைவில் தெரிய வரும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் இருந்து விடுபட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆஸி.,யுடன் உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், இந்தோ – பசுபிக் – பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் இதனால், பலன் கிடைக்கும் .…

விலங்குகளிடம் அன்பாக இருங்கள்: சச்சின், கோஹ்லி வேண்டுகோள்

மும்பை : ”நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளிடம் அன்பாக இருங்கள்,” என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார். கேரளாவில் பட்டாசு மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசிபழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை, பலத்த காயமடைந்து மரணம் அடைந்தது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’கேரளாவில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். தயவு செய்து நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,’ என தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் கூறுகையில்,”அடையாளம் தெரியாத நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க கேரளா வனத்துறைக்கு நமது ஆதரவையும், உதவியையும் வழங்குவோம்,” என்றார்.

சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்

சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னை: தமிழகத்தில் இம்மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் ஊரடங்கு அமலில் இருந்த போதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்சிகள் ஓட அனுமதிக்கப்பட்டுள்ளது. டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், அதை கட்டுப்படுத்த மேற்கண்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த போலீசார் நேற்று முதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி 2 பேர் சென்ற மோட்டார்…

பணிபுரியும் பள்ளியிலேயே ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது- கல்வித்துறை உத்தரவு

பணிபுரியும் பள்ளியிலேயே ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை: பொதுத்தேர்வையொட்டி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-* மாணவர்கள் தேர்வு எழுதக்கூடிய விடைத்தாள்கள் அனைத்தும் முதன்மை தேர்வு மையங்களிலேயே பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். * நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் அவர்களின் வசதிக்காக வட்டாரத்துக்கு 2 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கவேண்டும். * கல்வி மாவட்டம் மற்றும் வட்டார அளவில் ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அருகில் உள்ள பிற பள்ளியில் தேர்வு பணியாற்றிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே தேர்வுபணியில் ஈடுபடக்கூடாது. * தேர்வு பணியில்…

வெட்டுக்கிளி விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை- மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு

சாத்தூர்: சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேட்டமலை ஊராட்சி அய்யனார் கோவில் அருகில் நடை பெற்று வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாணிக் தாகூர் எம்.பி, சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், தி,மு,க பிரமுகர் கோசுகுண்டு சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் காஜா மைதீன் பந்தே நவாஸ் ஆகியோருடன் ஆய்வு செய்தார். வேலை செய்யும் பெண்களிடம் தினந்தோறும் வேலை இருக்கிறதா? வருகை பதிவேடு பதிவு செய்கிறார்களா? தினந்தோறும் எத்தனை மீட்டர் அளந்து தருகிறார்கள்? வேலையில் கஷ்டம் எதுவும் இருக்கிறதா? போன்ற நிறை குறைகளை கேட்டறிந்தார். பலபெண்கள் 100 நாள் வேலை திட்டத்தை நூற்று ஐம்பது நாளாக உயர்த்தி தரவும், மர கன்றுகளை நட்டு அதனை சுற்றி முள்வேலி அமைப்பது கஷ்டமாக இருக்கிறது. கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.…

தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு

தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. புதுடெல்லி: விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ராஜீவ் காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டு மற்றும் போட்டிகளுக்கு பங்களிப்பு அளிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. கேல்ரத்னா விருது பெறுபவருக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந் தேதி இந்த விருது வழங்கப்படுவது வாடிக்கையாகும். தேசிய விளையாட்டு விருதுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். ஆனால் கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு விருதுக்கு…

சேமிப்பின் அவசியத்தை உணர்த்திய கொரோனா

கொரோனாவால் இயல்பு வாழ்க்கை முடங்கியதால் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள். அவர்களுக்கு சேமிப்பின் அவசியத்தை கொரோனா உணர்த்தி இருக்கிறது. சேமிப்பு இல்லாத குடும்பம், கூரை இல்லாத வீடு. சிறு, துளி பெரு வெள்ளம். சேமிப்பு நம்முடைய பாதுகாப்பு. இப்படி அடுக்கடுக்கான முதுமொழிகள் சேமிப்பின் அவசியம் குறித்து நமக்கு உணர்த்துகின்றன. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது கை நிறைய சம்பாதித்து, நினைத்ததை உடனே வாங்குவது அல்ல. கடன் வாங்காமல் வாழ்வதே மகிழ்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்க்கை என்று கூறுவார்கள். செலவு போக தங்களுடைய வருமானத்தின் ஒரு பகுதியை சேர்த்து வைத்தால், அது எதிர்காலத்தில் திடீர் செலவுகளை ஈடுகட்ட உதவிக்கரமாக இருக்கும். வரவையும் தாண்டி செலவு செய்தால் குடும்பம் நடத்துவது கடினம். இதனால் தான் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மத்திய,மாநில அரசுகள் போட்டிப்போட்டு திட்டங்களை அறிவித்து வருகின்ற நடுத்தர…