ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் நடைமேம்பால கட்டுமானம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார், ஜூன் 12- ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேம்பாலம் கட்டுமானப்பணி நேற்று துவங்கியது.இங்குள்ள பிளாட்பார்ம் தாழ்வாகவும், நீளம், உயரம் குறைந்தும், நடைமேம்பாலம் இல்லாமலும் இருந்தது. பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். நடைமேம்பாலம் அமைக்கக்கோரி தனுஷ்குமார் எம்.பி., சந்திரபிரபா எம்.எல்.ஏ., கோட்ட ரயில்வே அதிகாரிகளை வலியுறுத்தினர். பயணிகள் சார்பில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்றது. முதலாவது பிளாட்பார்ம் எஸ்.1 மற்றும் எஸ்.2 ரயில் பெட்டிகள் நிற்குமிடத்தில் நடைமேம்பாலம் அமைகிறது. இதற்கான கட்டுமானப்பணி நேற்று துவங்கியது.  

‘மாஸ் கிளீனிங்’: நகராட்சிகளில் மீண்டும் துவக்க வேண்டும்: அடிப்படை வசதிக்காக மக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி: விருதுநகர் நகராட்சிகளில் நிறுத்தப்பட்டிருந்த’மாஸ் கிளீனிங்’ பணியை மீண்டும் துவக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் வாரம் தோறும் ‘மாஸ் கிளீனிங்’ பணிகள் நடந்தன. நகராட்சியில் ஏதாவது ஒரு வார்டினை சுழற்சி முறையில் தேர்வு செய்து தெருக்களில் குவியும் குப்பைகளை அகற்றுதல், சாலை சுத்தம், வாறுகால் துார் வாருதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. இவை சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் தலைமையில் தாய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர். வார்டுகளில் சுகாதாரம் மேம்பட்டது.தற்போது மாஸ் கிளீனிங் நடக்காததால் நகரங்களில் குப்பைகள் அகற்றாமல் துர்நாற்றம் எடுக்கிறது. வாறுகால் துார்வாரப்படவில்லை. கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒரு சில நகாரட்சிகளில் சில நாட்கள் மட்டுமே மாஸ் கிளீனிங் நடந்தது. இரு ஆண்டாக நிறுத்தப்பட்டிருக்கும் மாஸ் கிளீனிங் பணியை மீண்டும் துவக்க…