பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் போட்டிகள்- இஸ்ரோ அறிவிப்பு

பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிக்க இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டியை அறிவித்துள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். சென்னை: பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிப்பதற்காக இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டிகளை ஆன்-லைன் மூலம் நடத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது 1 முதல் 3-ம் வகுப்புக்கான படம் வரைதல் போட்டி, 4 முதல் 8-ம் வகுப்புக்கான மாதிரிகள் தயாரிக்கும் போட்டி, 9 முதல் 10-ம் வகுப்புக்கான கட்டுரை போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்), பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான கட்டுரை போட்டி, விண்வெளி வினாடி வினா போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்) நடத்தப்படுகிறது.

கண்காணியுங்க ! கண்மாய்களில் கொட்டப்படும் கழிவுகள: நிலத்தடி நீர் மாசால் விவசாயிகள் அவதி

ராஜபாளையம்: விவாயத்திறகு அடிப்படையான கண்மாய்களில் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு தொடர்கிறது. துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து தடுக்க வேண்டும். மனிதனுக்கு தேவையான நீரை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை அமைத்து பாதுகாத்து வந்தோம்.ஆனால் இதை முறையாக கண்காணிக்க தவறியதால்இதை நம்பி வாழ்ந்து வரும் பறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட கண்ணிற்கு தெரியாத உயிர் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விட்டோம். மக்கள் பெருக்கம், ஆக்கிரமிப்பு ,முறையற்ற கழிவு மேலாண்மையால் இந்நிலை தொடர்கிறது. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பையை கண்மாய் கரையில் கொட்டி நிலத்தடிநீருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதோடு குப்பையை எரிப்பதால் ஏற்படும் புகையானது சுற்று மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீடுகளில் வெளியேறும் கழிவுநீரும் கண்மாய்களில் கலக்கிறது. கழிவு நீரும் குப்பையும் ஒன்று சேர நிலத்தடி நீர் பாழாக கண்மாய் நீரை நம்பி உள்ள விவசாய…

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ராஜபாளையம்:ராஜபாளையம் தாலுகாவில் சேத்துார் ,தேவதானம் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் நடந்து வருகிறது. கடந்த பிப்.,முதல் ராஜபாளையத்தில் கொள்முதல் நிலையம் துவங்கியது. தற்போது இங்கு நேற்று முதல் கொள்முதல் தொடங்கி குவிண்டாலுக்கு மோட்டா ரகம் ரூ. 1,865, சன்ன ரகம் ரூ. 1,905 என கொள்முதல் செய்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா, நகர தலைவர் முருகேசன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தால் ஆதார் மையம் மூடல் தகவல் இல்லாததால் மக்கள் அவதி

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் நகராட்சி அலுவலகம், தபால் நிலையம், தாலுகா அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வந்தது. கொரோனா அச்சத்தால் தாலுகா அலுவலகம் தவிர மற்ற இரு இடங்களிலும் ஆதார் மையம் மூடப்பட்டது.தாலுகா அலுவலகத்தில் மட்டும் செயல்பட்டதால் இங்கு அதிகளவில் மக்கள் கூடினர். இதனால் இதுவும் முறையான அறிவிப்பு இன்றி மூடப்பட்டது . இது தெரியாலம் அதிகாலை முதலே மக்கள் இடம் பிடித்து காத்திருக்கின்றனர். முத்துலிங்காபுரம் சுஜாதா : அதிகாலை 5 :00மணி முதல் இடம் பிடித்து காத்திருக்கிறோம். சேவை மையம் திறப்பு பற்றி இது வரை தவகல் இல்லை. பஸ் வசதியின்றி ஆட்டோவில் வந்தும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது ,என்றார்.