Edappadi K Palaniswami

மாண்புமிகு மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) @RajKSinghIndia அவர்கள் இன்று (8.7.2020) தலைமைச் செயலகத்தில் சந்தித்த போது மின்சாரத்துறை தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தேன்.

Edappadi K Palaniswami

தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் விற்பனையில் முன்னோடியாக திகழும் ஆவின் நிறுவனம் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், ஆவின் டீ மேட் பால் ஆகிய 5 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தேன்.

ராஜபாளையம் அருகே லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி

ராஜபாளையம் அருகே லாரி மோதி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் அருகே உள்ள எம்.பி.கே. புதுப்பட்டியை சேர்ந்த கருப்பழகு மகன் மாசானன் (வயது25). இவர் தனியார் நூற்பாலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கோதைநாச்சியார்புரம் விலக்கில் சாலையை கடக்கும் போது ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த லாரி மோதியதில் மாசானன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கருப்பழகு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெற்றிடங்களை மரங்களால் நிரப்புவோமே

ராஜபாளையம்:பசுமை சூழ்ந்த ராஜபாளையத்தின் சுற்று வட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் குடியிருப்புகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாகமரக்கன்றுகள் நட்டு புதிய காடுகளை உருவாக்கி மழை பொழிவையும், சுத்தமான காற்றையும் அதிகரிப்பதே தீர்வாக அமையும் என இயற்கை ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.மனிதன் தேவைக்கேற்ப தங்கள் வசிப்பிடங்களை அமைத்து கொள்வது அவசியம் தான். ஆனால் அது பேராசை எனும் நிலையை எட்டும் போது அனைவரையும் பாதிக்கிறது. இயற்கை சமன்பாட்டை மதிக்காமல் அவசியமின்றி மரங்கள், காடுகளை அழிப்பது தொடர்கிறது. அதற்கு பதிலாக புதியதாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தவறி வருவது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இக்குறையை நிவர்த்தி செய்ய மரங்கள் வளர்ப்பதே தீர்வாக அமையும். ஒவ்வொரு மரமும் காற்றில் கலந்துள்ள நச்சு வாயுவான கார்பன்டை ஆக்சைடை உள்வாங்கி மனிதன் உயிர் வாழ அவசியமான ஆக்சிஜனை சுழற்சி முறைகளில் வெளியேற்றுகிறது.…

ராம்கோ சேர்மன் பிறந்த நாள் விழா

ராஜபாளையம்:ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா 85 வது பிறந்த நாள் விழா ராஜபாளையத்தில் நடந்தது. பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் மைதானம் நினைவாலயத்தில் நடந்த கீர்த்தனாஞ்சலியில் ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா குடும்பத்தினர்,நிறுவன அதிகாரிகள்,கல்வி, தொழில் நிறுவன உறுப்பினர்கள், பொது மக்கள் மரியாதை செலுத்தினர். தெற்கு வெங்காநல்லுார் வேதபாடசாலையில் இருந்து திருஉருவப்படத்துடன் கூடிய அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்ட நினைவு ஜோதி சாரதாம்பாள் கோயில், ராமமந்திரம் வழியாக மில்ஸ் வளாகத்தை அடைந்தது. வழியில் பல்வேறு இடங்களில் மரியாதை செய்யப்பட்டது.

Sivakasi News

சிவகாசி பழனியாண்டவர் தியேட்டர் எதிரே உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஸ்டாfப் ஒருத்தருக்கு கொரனா தொற்று உறுதி கிளை தற்காலிகமா 5 நாட்கள் செயல் படாதாம்

Mepco Schlenk Engineering College, Mepco Nagar, Sivakasi, Tamil Nadu

சிவகாசி மெப்கோ கல்லூரியில் 550 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுவிருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டுகளில் 750 படுக்கைகள் உள்ளன. தற்போது உள்ள நிலையில் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.சிகிச்சை மையம்எனவே அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களை முறையான கண்காணித்து சிகிச்சை அளிக்க சிவகாசி மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் 550 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக 250 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மீதமுள்ள படுக்கைகளும் விரைவில் தயாராகி விடும்.தற்போது உள்ள நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பரிசோதனை மையத்தில்…