ராஜபாளையம் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள், தெருப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பெண்கள் திரளாக குவிந்து அவரவர் வீடுகளுக்கு முன் முருகன் படங்களை வைத்து சஷ்டி கவசம் பாடினர்.கவிமணி தேசிக விநாயகம் தெரு, காமாட்சியம்மன் தெரு உள்ளிட்ட தெருக்களிலும் வீடுகள் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்துார்: ஒ.மேட்டுப் பட்டியில் மாவட்ட பா.ஜ.,பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தார். ஒன்றிய தலைவர் செல்வராஜ் சடையம்பட்டியில் வீட்டின் முன்பும், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் முனிஸ்வரன் அணைக்கரைப்பட்டி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்

வாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம் அருப்புக்கோட்டை:மனிதன் தன் வாழ்நாளில் பிறர் போற்றும் படியும் வாழ வேண்டும்.அரசு பணியில் இருந்தவர்கள் ஓய்விற்கு பிறகு தன் குடும்பத்தோடு ஒன்றி வாழ்வர். ஓய்வு பெற்ற பின்னும் ஏதாவது வகையில் மக்களுக்கு தன் ஊருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இருப்பவர்களும் உண்டு. அந்த வகையில் அருப்புக்கோட்டை கோபாலபுரத்தை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு ஆசிரியர் திரவியம் 72, தன் ஊர் மக்களுக்கு உதவிகளை செய்து வருபவர்….

congratulations-2-students-2

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்! விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக! தேர்ச்சி அடையாதோரும் மனம் தளர வேண்டாம்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள். வெற்றி நிச்சயம்!…

Rajapalaym News

ராஜபாளையத்தில் கொரனோ தொற்று பரிசோதனை முடிவுகளை ஒரு வாரம் கடந்தும் தெரிவிக்காமல் அலட்சியம்.கொரனோ தொற்று உள்ளவர்களை மட்டும் கைது செய்யாத குறையாக மிரட்டி வார்டில் அனுமதிக்கின்றனர். இந்த செயல் துடிப்பை கொரனோ தொற்று இல்லாத நபர்களுக்கு உடனடியாக பரிசோதனை முடிவுகளைச் சொன்னால் அவர்கள் வேலைக்குச் சென்று வயிற்றைக் கழுவ உதவியாக இருக்கும். ஏனெனில் எல்லா நிறுவனங்களும் பரிசோதனை முடிவுகளை முறையாக தெரிந்து கொண்ட பிறகுதான் தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்கின்றன.