அட்டாக் ஹெலிகாப்டர்கள்.. ஹைடெக் போர் விமானங்கள்.. லடாக்கில் இந்தியா புதிய மூவ்.. சீனா அதிர்ச்சி!

அட்டாக் ஹெலிகாப்டர்கள்.. ஹைடெக் போர் விமானங்கள்.. லடாக்கில் இந்தியா புதிய மூவ்.. சீனா அதிர்ச்சி! லடாக்: லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியா தற்போது எல்லையில் அதிக அளவில் விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை களமிறக்கி உள்ளது. இந்தியா – சீனா இடையிலான லடாக் மோதல் முக்கியமான தருணத்தை எட்டி இருக்கிறது. லடாக்கில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. டெப்சாங், பாங்காங் திசோ, கல்வான்ஆகிய பகுதிகளில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அதேபோல் லடாக்கில் அனைத்து எல்லை பகுதியிலும் சீனா தொடர்ந்து தனது விமான படைகளை குவித்து வருகிறது. அதிக அளவில் சீனா தனது விமானப்படையை களமிறக்கி உள்ளது. சீனாவின் ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இந்தியா பதிலடி இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும்…

DOCTORSDAY 01JULY2020

வணங்குகிறோம் தேசிய #மருத்துவர்கள் #தினவாழ்த்துக்கள் 01ஜூலை2020 JULY 1st NATIONAL DOCTORS DAY தன்னலம் கருதாமல் மக்கள் உயிர்காக்கும் அரும்பணியில் இரவு பகல் பாராமல் அயரது பணிசெய்துவரும் மருத்துவர்களின் சேவையை போற்றி வணங்குகிறோம்… DOCTORSDAY 01JULY2020

ரெட்மி 9ஏ, ரெட்மி 9சி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் ஆனது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில்வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

#InternationalOlympicDay #TNPolice

முயன்றால் முடியாதது ஏதுமில்லை…முயற்சியை மூச்சாய் கொண்டால் அனைத்தும் சாத்தியமே… உலக ஒலிம்பிக் தின வாழ்த்துக்கள் இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும். …

பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் போட்டிகள்- இஸ்ரோ அறிவிப்பு

பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிக்க இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டியை அறிவித்துள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். சென்னை: பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிப்பதற்காக இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டிகளை ஆன்-லைன் மூலம் நடத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது 1 முதல் 3-ம் வகுப்புக்கான படம் வரைதல் போட்டி, 4 முதல் 8-ம் வகுப்புக்கான மாதிரிகள் தயாரிக்கும் போட்டி, 9 முதல் 10-ம் வகுப்புக்கான கட்டுரை போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்), பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான கட்டுரை போட்டி, விண்வெளி வினாடி வினா போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்) நடத்தப்படுகிறது.

கண்காணியுங்க ! கண்மாய்களில் கொட்டப்படும் கழிவுகள: நிலத்தடி நீர் மாசால் விவசாயிகள் அவதி

ராஜபாளையம்: விவாயத்திறகு அடிப்படையான கண்மாய்களில் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு தொடர்கிறது. துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து தடுக்க வேண்டும். மனிதனுக்கு தேவையான நீரை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை அமைத்து பாதுகாத்து வந்தோம்.ஆனால் இதை முறையாக கண்காணிக்க தவறியதால்இதை நம்பி வாழ்ந்து வரும் பறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட கண்ணிற்கு தெரியாத உயிர் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விட்டோம். மக்கள் பெருக்கம், ஆக்கிரமிப்பு ,முறையற்ற கழிவு மேலாண்மையால் இந்நிலை தொடர்கிறது. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பையை கண்மாய் கரையில் கொட்டி நிலத்தடிநீருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதோடு குப்பையை எரிப்பதால் ஏற்படும் புகையானது சுற்று மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீடுகளில் வெளியேறும் கழிவுநீரும் கண்மாய்களில் கலக்கிறது. கழிவு நீரும் குப்பையும் ஒன்று சேர நிலத்தடி நீர் பாழாக கண்மாய் நீரை நம்பி உள்ள விவசாய…

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் நடைமேம்பால கட்டுமானம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார், ஜூன் 12- ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேம்பாலம் கட்டுமானப்பணி நேற்று துவங்கியது.இங்குள்ள பிளாட்பார்ம் தாழ்வாகவும், நீளம், உயரம் குறைந்தும், நடைமேம்பாலம் இல்லாமலும் இருந்தது. பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். நடைமேம்பாலம் அமைக்கக்கோரி தனுஷ்குமார் எம்.பி., சந்திரபிரபா எம்.எல்.ஏ., கோட்ட ரயில்வே அதிகாரிகளை வலியுறுத்தினர். பயணிகள் சார்பில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்றது. முதலாவது பிளாட்பார்ம் எஸ்.1 மற்றும் எஸ்.2 ரயில் பெட்டிகள் நிற்குமிடத்தில் நடைமேம்பாலம் அமைகிறது. இதற்கான கட்டுமானப்பணி நேற்று துவங்கியது.  

இந்தியா – ஆஸி., உறவால் உலகிற்கு நன்மை: பிரதமர் மோடி

பிரதமர் மோடி பேசியதாவது: ஆஸி.,யில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு, இந்திய மக்கள் சார்பில் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்த இதுவே சரியான நேரம். நமதுநட்பை பலப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை, வாய்ப்பாக மாற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நமது உறவை பொறுத்து தான், இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவும். கொரோனா பிரச்னையை ஒரு வாய்ப்பாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் பலன்கள் விரைவில் தெரிய வரும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் இருந்து விடுபட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆஸி.,யுடன் உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், இந்தோ – பசுபிக் – பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் இதனால், பலன் கிடைக்கும் .…

விலங்குகளிடம் அன்பாக இருங்கள்: சச்சின், கோஹ்லி வேண்டுகோள்

மும்பை : ”நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளிடம் அன்பாக இருங்கள்,” என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார். கேரளாவில் பட்டாசு மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசிபழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை, பலத்த காயமடைந்து மரணம் அடைந்தது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’கேரளாவில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். தயவு செய்து நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,’ என தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் கூறுகையில்,”அடையாளம் தெரியாத நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க கேரளா வனத்துறைக்கு நமது ஆதரவையும், உதவியையும் வழங்குவோம்,” என்றார்.

வெட்டுக்கிளி விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை- மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு

சாத்தூர்: சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேட்டமலை ஊராட்சி அய்யனார் கோவில் அருகில் நடை பெற்று வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாணிக் தாகூர் எம்.பி, சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், தி,மு,க பிரமுகர் கோசுகுண்டு சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் காஜா மைதீன் பந்தே நவாஸ் ஆகியோருடன் ஆய்வு செய்தார். வேலை செய்யும் பெண்களிடம் தினந்தோறும் வேலை இருக்கிறதா? வருகை பதிவேடு பதிவு செய்கிறார்களா? தினந்தோறும் எத்தனை மீட்டர் அளந்து தருகிறார்கள்? வேலையில் கஷ்டம் எதுவும் இருக்கிறதா? போன்ற நிறை குறைகளை கேட்டறிந்தார். பலபெண்கள் 100 நாள் வேலை திட்டத்தை நூற்று ஐம்பது நாளாக உயர்த்தி தரவும், மர கன்றுகளை நட்டு அதனை சுற்றி முள்வேலி அமைப்பது கஷ்டமாக இருக்கிறது. கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.…