விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது இன்று புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,067ஆக அதிகரிப்பு

BREAKING NEWS

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு * 2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன – மின் வாரியம் * மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் 6 மாவட்டங்களுக்கு மட்டுமே நீட்டிப்பு

ராம்கோ சேர்மன் பிறந்த நாள் விழா

ராஜபாளையம்:ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா 85 வது பிறந்த நாள் விழா ராஜபாளையத்தில் நடந்தது. பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் மைதானம் நினைவாலயத்தில் நடந்த கீர்த்தனாஞ்சலியில் ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா குடும்பத்தினர்,நிறுவன அதிகாரிகள்,கல்வி, தொழில் நிறுவன உறுப்பினர்கள், பொது மக்கள் மரியாதை செலுத்தினர். தெற்கு வெங்காநல்லுார் வேதபாடசாலையில் இருந்து திருஉருவப்படத்துடன் கூடிய அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்ட நினைவு ஜோதி சாரதாம்பாள் கோயில், ராமமந்திரம் வழியாக மில்ஸ் வளாகத்தை அடைந்தது. வழியில் பல்வேறு இடங்களில் மரியாதை செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு! AICTE அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் நிலையில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளுக்கான எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில், தற்போது ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளை திறக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) அறிவுறுத்தியுள்ளது. AICTE கூட்டத்தில் முடிவு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) 62-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அந்தத் திட்டத்திற்கு மாற்றாக புதிய அறிவிப்பை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. புதிய…

🔲தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படலாம் அல்லது திருடப்படலாம் என்று கூறி இந்தியாவில் நாட்டில் 59 சீன பயன்பாடுகளை தடை

இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஒவ்வொரு சீன ஆப்பிற்கும் சரியான மாற்று ஆப்ஸ் முழு விவரம் 🔲தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படலாம் அல்லது திருடப்படலாம் என்று கூறி இந்தியாவில் நாட்டில் 59 சீன பயன்பாடுகளை தடை 🔲 செய்வதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) அறிவித்தது

விலங்குகளிடம் அன்பாக இருங்கள்: சச்சின், கோஹ்லி வேண்டுகோள்

மும்பை : ”நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளிடம் அன்பாக இருங்கள்,” என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார். கேரளாவில் பட்டாசு மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசிபழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை, பலத்த காயமடைந்து மரணம் அடைந்தது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’கேரளாவில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். தயவு செய்து நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,’ என தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் கூறுகையில்,”அடையாளம் தெரியாத நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க கேரளா வனத்துறைக்கு நமது ஆதரவையும், உதவியையும் வழங்குவோம்,” என்றார்.

தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு

தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. புதுடெல்லி: விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ராஜீவ் காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டு மற்றும் போட்டிகளுக்கு பங்களிப்பு அளிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. கேல்ரத்னா விருது பெறுபவருக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந் தேதி இந்த விருது வழங்கப்படுவது வாடிக்கையாகும். தேசிய விளையாட்டு விருதுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். ஆனால் கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு விருதுக்கு…

சேமிப்பின் அவசியத்தை உணர்த்திய கொரோனா

கொரோனாவால் இயல்பு வாழ்க்கை முடங்கியதால் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள். அவர்களுக்கு சேமிப்பின் அவசியத்தை கொரோனா உணர்த்தி இருக்கிறது. சேமிப்பு இல்லாத குடும்பம், கூரை இல்லாத வீடு. சிறு, துளி பெரு வெள்ளம். சேமிப்பு நம்முடைய பாதுகாப்பு. இப்படி அடுக்கடுக்கான முதுமொழிகள் சேமிப்பின் அவசியம் குறித்து நமக்கு உணர்த்துகின்றன. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது கை நிறைய சம்பாதித்து, நினைத்ததை உடனே வாங்குவது அல்ல. கடன் வாங்காமல் வாழ்வதே மகிழ்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்க்கை என்று கூறுவார்கள். செலவு போக தங்களுடைய வருமானத்தின் ஒரு பகுதியை சேர்த்து வைத்தால், அது எதிர்காலத்தில் திடீர் செலவுகளை ஈடுகட்ட உதவிக்கரமாக இருக்கும். வரவையும் தாண்டி செலவு செய்தால் குடும்பம் நடத்துவது கடினம். இதனால் தான் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மத்திய,மாநில அரசுகள் போட்டிப்போட்டு திட்டங்களை அறிவித்து வருகின்ற நடுத்தர…