TTVDhinakaran

கழக பொதுச்செயலாளர் திரு. TTV தினகரன் அவர்கள் அறிக்கை:மருத்துவ படிப்புக்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, #நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இது நிரந்தரத் தீர்வாக அமையாது!#TTVDhinakaran#AMMK#NEET2020

M.k Stalin

எட்டாக்கனியாக இருந்த கல்வியை மதியஉணவு திட்டத்தால் எல்லோருக்கும் பந்திவைத்த காமராஜரின் பிறந்தநாளில் அவரின் திருவுருவ படத்துக்கு மரியாதைசெய்தேன்.

Edappadi K Palaniswami

மாண்புமிகு மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) @RajKSinghIndia அவர்கள் இன்று (8.7.2020) தலைமைச் செயலகத்தில் சந்தித்த போது மின்சாரத்துறை தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தேன்.

Edappadi K Palaniswami

தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் விற்பனையில் முன்னோடியாக திகழும் ஆவின் நிறுவனம் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், ஆவின் டீ மேட் பால் ஆகிய 5 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தேன்.

dmk-mlas-meet-virudhunagar-collector/

விருதுநகர் மாவட்டத்தில், ‘கொரொனா’தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் உட்சபட்சமாக 108 பேருக்கு ‘கொரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போதுமான பரிசோதனைக் கருவிகள் இல்லை என்பதால் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுவோருக்கான பரிசோதனை முடிவுகள் வருவதற்கும், அவர்களில் யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் அது உறுதி செய்யப்படுவதற்கும் ஏறத்தாழ 7 நாட்களுக்கு மேலாக ஆகின்றது. இந்த இடைக்காலத்தில் நோய்த்தொற்று மேலும் பரவலாக பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிடுகின்றது. எனவே, அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்வதுடன் விரைவாக முடிவுகளைப் பெற வழி செய்யும் வண்ணம் கூடுதல் கருவிகளைப் பெற்று நோய்தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட ஆட்சியரைக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினரும் சந்தித்து வலியுறுத்தினோம்.

DOCTORSDAY 01JULY2020

பிறருக்காகவே வாழ்பவர்கள் மருத்துவர்கள்… நாம் வாழ; மருத்துவர்கள் நலம் வாழட்டும் -மு.க.ஸ்டாலின் சென்னை: பிறருக்காகவே வாழ்பவர்கள் மருத்துவர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இன்று மருத்துவர் தினம் என்பதால் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மருத்துவர்கள் தினம் தன்னுயிரைப் பற்றி மட்டுமே கவலைப்படும் பெரும்பான்மை மனிதர்களுக்கிடையே, பிறர் உயிர் வாழ்தலைப் பற்றியும் கவலைகொள்பவர்கள் மருத்துவர்கள். பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வாழ்க்கை! அப்படி வாழ்ந்த பி.சி.ராய் எனப்படும் மருத்துவரின் பிறந்தநாளில் மருத்துவர்கள் தினம் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது.

சாத்தான்குளம்- போலீஸ் அதிகாரிகளுக்கு திடீரென புதிய பொறுப்பு- கனிமொழி கண்டனம்

சாத்தான்குளத்தில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை மிரட்டியதால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மாலையிலேயே புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை காப்பாற்றுவதில் காட்டும் ஆர்வத்தையும் தீவிரத்தையும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் காட்டி இருக்க வேண்டும் என்றார் கனிமொழி.

இரத்த தான முகாம்

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு TTVதினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் தலைமையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் பசும்பொன் சித்தர் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாமை நிறுவனர் J.கோபி, ஒருங்கிணைப்பாளர் M.முத்துக்குமார், தலைவர் M.கருப்பபசாமிபாண்டியன், துணைத்தலைவர் B.பாலமுருகன், செயலாளர் S.கார்த்திக்போஸ், பொருளாளர் N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் . இந்நிகழ்வில் உடன் மாவட்ட மகளிரணி செயலாளர் D.கவிதாதனசேகரன் ,PG.அழகுராஜா, மு.முருகானந்தம், சொர்ணயாபாண்டியன், G.P.வைகுண்டமூர்த்தி, முருகேசன், வெள்ளைப்பாண்டி, கிருஷ்ணசாமி, R.தங்கராஜ், S.ராஜா, கிருஷ்ணசாமி, சாமிநத்தம் M.தங்கதுரை, இதயக்கனி, பாஸ்கரன், முனியசாமி, முத்துமகேஸ்வரன், த.முருகானந்தம், வீரபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்று 04.03.2020 காந்திநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கிய பொது

இன்று 04.03.2020 காந்திநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கிய பொது இலவச விலையில்லா மிதிவண்டி வழங்கி மகிழ்ந்த தருனம் மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலும் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலும் பால் உள்ளம் கொண்ட பால்வளத் துறை அமைச்சர்.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று 04.03.2020 காந்திநகர் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன்.வீ.லட்சுமிநாராயணன் அவர்கள் வழங்கினார் … … …