Rajapalayam News 16-07-2020

இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் உள்ள 114 கொரோனா நோயாளிகளுக்கும் நோய் குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரின் 49,50,51 வது மாத ஊதியத்திலிருந்து 3,15,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிலிருந்து பாதம் பருப்பு, முந்திரி பருப்பு, கடலை பருப்பு, கிஸ்மிஷ் பழம், பேரிச்சம்பழம், மாதுளை, சாத்துகுடி பழம், எலும்பிச்சை பழம், மஞ்சள் பொடி (பத்து வகையான பொருட்கள்) மற்றும் 1 லிட்டர் சுத்திகரித்த தண்ணீர் கேன் அடங்கிய பைகளை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று (16.07.2020) மாலை 4 மணி அளவில் மருத்துவர்கள் மூலம் வழங்கினார். இந்நிகழ்வில் MLA அவர்கள், ஏழை எளிய பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கிலும் இராஜபாளையம் தொகுதியில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்ப்படக்கூடாது என்ற நோக்கிலும் இந்த சத்தான பொருள்கள் வழங்கப்படுவதாகவும் இதுபோல் இனி தினந்தோறும் புதியதாக வரும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மூலம் மேற்கண்ட நோய் எதிர்ப்பு சக்தி பொருள்கள் வழங்கப்படும் எனக்கூறினார், மேலும் இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனைக்கும் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கும் நோயாளிகளின் நலன் காக்கும் நோக்கில் சுத்தரித்த குடிநீர் மற்றும் சுடு தண்ணீர் வழங்க தண்ணீர் சுத்திகரிப்பு கருவி ஆடர் செய்யப்பட்டுள்ளது, ஒரு சில தினங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி இரண்டு மருத்துவமனைகளிலும் பொருத்தப்படும் எனக்கூறினர். மேலும் மருத்துவர்களிடம் கொரோனா நோயாளிகள் குறித்து நலம் விசாரித்தார், அதனைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகள் நோயிலிருந்து மீண்டுவர திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்களும் மாவட்ட செயலாளர்கள் KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்களும் தங்கம் தென்னரசு MLA* அவர்களும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும், தனுஷ் M.குமார் MP அவர்களும் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்களும் இராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் அனைத்துவகையிலும் உறுதுணையாக இருப்போம் எனக்கூறினார். இந்நிகழ்வில் மருத்துவர் கிரிஷா, நகர துணை செயலாளர் சரவணன் மருத்துவர்கள், செவிலியர்கள் தொண்டர் அணி மாயாவி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment